செய்திகள்

"முறைப்பாடுகளை முன் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை"-ஆயுததாரி டக்ளஸ மிரட்டல்

கடந்த ஞாயிற்றுக் கிழமை பாரிசிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரு வானொலியில் நீணட ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிறிலங்கா அரசின் அமைச்சரும் ஈபிடிபி ஆயுதக்குழுவின் தலைவருமான ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா நேயர்கள் கேட்ட அனைத்து கேள்விகளையும் அபண்டமான பொய் என மறுதலித்தார்.

லண்டனில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழன் தனது சகோதரருக்கு ஈபிடிபி ஆயுததாரிகளால் இளைக்கப்பட்ட அநீதிதை எடுத்துக்கூறி நியாயம் கேட்டார். குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த ஆயுததாரி தேவானந்தா தனது கவனத்திறகு கொண்டுவரப்பட்ட சம்பவம் நடந்த இடம் மற்றும் குற்றச்சாட்டை வைத்த ஈழத்தமிழனின் பெயர் விடையங்களை தான் தனது ஆயுதகுழு உறுப்பினர்களிடம் விசாரிப்பதாகவும் அப்படி தான் விசாரிக்கும் பொழுது தான் கொடுக்கும் விபரங்களைக் கொண்டு தனது ஆயுததாரிகள் நாட்டில் பாதிக்கப்பட்டதென கூறப்படும் ஈழுத்தமிழ் மகன் மீது ஏறுமாறாக நடவடிக்கை எடுப்பார்கள் என அச்சுறுத்தினார்.

ஆயுதாரியின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து வேறு எந்த நேயர்களும் தமது குடும்பத்தினருக்கு ஈபிடிபி ஆயுதகுழுவால் இளைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்கூறமுன்வரவில்லை.

ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா ஈழுத்தில் மட்டுமல்ல தாய் தமிழகத்திலும் கொலை, கடத்தல் மற்றும் கப்பம் அறவிட்டதிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மூன்று வழக்குகளில் தேடப்படும் நபராகவும் ஆயுததாரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[mp3player width=300 height=80 config=fmp_jw_widget_config.xml playlist=fmp_jw_widget_playlist.xml]