அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்

Home » homepage » அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான இரண்டு தொடர் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வரும் புதன்கிழமை, ஒக்டோபர் 06 மாலை 2.00 மணியளவில் முதல் நிகழ்வு Room QG 13, Ground floor, Business School Building, Dublin City University. Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளராக Denis Halliday பங்கேற்கின்றார்.

இரண்டாவது நிகழ்வு வியாழக்கிழமை, ஒக்டோபர் 07 மாலை 7.00 மணியளவில் J.M. Synge Theatre, Arts Builbing, Trinity College, Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளர்களாக Denis Halliday மற்றும் Mary Lawlor பங்கேற்கின்றனர்.

இந்த பேச்சாளர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் டப்ளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanent Peoples’ Tribunal) நடுவர்களாக இருந்தவர்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இலங்கையில் இறுதியாக நடைபெற்ற போரின் நிகழ்வுகள் ஒளிப்படமாக காண்பிக்கப்படவுள்ளது.

இந்த இரண்டு தொடர் நிகழ்வுக் கூட்டங்களிற்கும் அனைத்து அயர்லாந்து வாழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அயர்லாந்து தமிழர் அமைப்பினர் கேட்டுக் கொள்கின்றனர்.


%d bloggers like this: