நமிபியாவிலிருந்து ஜெர்மனி வரவிருந்த விமானத்தில் சூட்கேசில் வெடிகுண்டு

Home » homepage » நமிபியாவிலிருந்து ஜெர்மனி வரவிருந்த விமானத்தில் சூட்கேசில் வெடிகுண்டு

நமிபியா விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்படவிருந்த விமானத்தில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றினுள் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

வின்ட்ஹோக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மியூனிச் செல்வதற்காக இருந்த விமானத்தில் சந்தேகப்படும் வகையில் பார்சல் இருந்ததால் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் டைமர், டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேறு எந்த வெடிபொருளும் இதுவரை அதிகாரிகள் கையில் சிக்கவில்லை. தகவல் அறிந்த உடன் ஜெர்மனி விமான நிலையமும் உஷார்படுத்தப்பட்டது.

ஏற்கனவே இந்த மாதத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் எந்நேரமும் நிகழலாம் என்பதால் ஜெர்மனி விமான நிலையத்தில் பாதுகாப்பு முன்பே பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தீவிர விசாரணையை நமீபிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


%d bloggers like this: