இந்தியா

சீமான் மீதான வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இனவெறி சிங்கள கடற்படையை கண்டித்து குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தமிழன் சீமான் அவர்களின் கைதை எதிர்த்து அவருடைய சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த நான்கு மாதங்களாக வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் தரப்பு வழக்றிஞர் தாடா சந்திரசேகர் அவர்கள் இவ்வழக்கை விரைவில் முடிக்கும் படி கேட்டுக்கொண்டதை அடுத்து நீதிபதிகள் வருகின்ற 25ஆம் தேதி இவ் வழக்கின் மீதான இறுதி விசாரணை நடக்கும் என்றார்.

அதை அடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது ஆனால் இன்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு வராத காரணத்தால் மீண்டும் இவ்வழக்கை வருகின்ற 3.12.2010 அன்று நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.