தமிழீழம்

புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் நடத்தும் சிறிதரன் எம்.பி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி சிவஞானம் சிறிதரன் புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் அரசியல் நடத்தி வருகின்றார்.

ஈழத்து உறவுகளின் வாழ்வாதாரம், மறுவாழ்வு, மீள்குடியேற்றம், மீட்சி ஆகியவற்றுக்காக புலம்பெயர் தமிழர்கள் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, ஈடுபாடு ஆகியவற்றுடன் பேருதவிகளை நேரடியாகவும், மனிதாபிமான அமைப்புக்கள் மூலமாகவும் செய்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

புலம்பெயர் தமிழர்களின் இப்பரந்த மனப்பான்மையை அரசியல் இருப்புக்காக பயன்படுத்துகின்றமையில் மகாகெட்டிக்காரராக இவர் உள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் சைக்கிள்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கி வன்னியில் வாழும் மக்களுக்கு விநியோகித்து, பத்திரிகைகள் மூலம் விளம்பரம் தேடுகின்றார்.

ஆனால் உண்மையில் உதவி செய்கின்ற புலம்பெயர் தமிழர்களின் பெயர்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.