மட்டு. மாவட்டத்தில் மாவீரர் பிரசுரம் – படையினர் தாக்குதல்

Home » homepage » மட்டு. மாவட்டத்தில் மாவீரர் பிரசுரம் – படையினர் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சிலபகுதிகளில் நேற்றைய தினம் மாவீரர் தினம் சம்பந்தமான சில பிரசுரங்கள் ஒட்பட்டிருந்த நிலையில் அதனை அடுத்து அந்தப்பகுதியில் சிறிலங்காவின் பயங்கரவாத அரச படையினர் தமது அட்டகாசங்களை காட்டியுள்ளனர்.

மாவீரர் நாள் சம்பந்தமான பிரசுரங்கள் கொக்கட்டிச்சேலை, அரசடித்தீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்பட்டதாகவும் இதனை ஒட்டியவர்கள் யாரெனக் கேட்டு அந்தப்பகுதி மக்களையும் அந்தப்பகுதிகளில் பயணம் செய்தவர்களையும் சிறீலங்கா பயங்கரவாத அரச படையினர் தாக்கியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அந்தப்பகுதிகளில் சிறீலங்கா பயங்கரவாத அரச படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


%d bloggers like this: