ராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம் மறுப்பு

Home » homepage » ராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம் மறுப்பு

நேபாளத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகளை தீர்க்க இலங்கை அதிபர் ராஜபட்சேவிடம் உதவி கேட்கப்பட்டதாக வெளியான தகவலை நேபாள அதிபரின் அதிகாரப்பூர்வ ஊடக ஆலோசகர் மறுத்துள்ளார்.

கடந்த மாதம் சீனாவில் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சந்தித்துப் பேசியபோது, தனது நாட்டின் அரசியல் பிரச்னையைத் தீர்க்க உதவுமாறு நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் கேட்டுக் கொண்டதாக, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கூறியிருந்ததாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால், இத்தகவலை நேபாள அதிபரின் அதிகாரப்பூர்வ ஊடக ஆலோசகர் ராஜேந்திரா தால் மறுத்துள்ளார். தங்கள் நாட்டின் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதை ஏற்க முடியாது என்றும், இத்தகைய கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இது அடிப்படையற்ற தகவல். நேபாள அதிபர் தரப்பில் அத்தகைய வேண்டுகோள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


%d bloggers like this: