"எல்லோரும் கரம்கோர்த்து விடுதலைத்தேரை இழுக்கவேண்டும்"- நோர்வே மாவீரர்நாள் நிகழ்வில் பெ.மணியரசன்

Home » homepage » "எல்லோரும் கரம்கோர்த்து விடுதலைத்தேரை இழுக்கவேண்டும்"- நோர்வே மாவீரர்நாள் நிகழ்வில் பெ.மணியரசன்

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் கார்த்திகை27  மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றுள்ளது மூவாயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தேசவிடுதலைக்காய் விதையாய் வீழ்ந்த வீரருக்கு நெய்விளக்கேற்றி மலர்தூவி மரியாதை செலுத்தி தேசப்புதல்வர்களின் கனவை நனவாக்க விடுதலைப்பணியை முன்னெடுப்போமென உறுதியும் எடுத்துக்கொணடனர்.

அத்தோடு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் மாவீரர் கானங்களும் அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் மாணவிகள் வழங்கிய நிமிர்வு நாட்டிய நாடகமும் தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சியின் செயலாளரும் தமிழீழ உணர்வாளருமான திரு பெ.மணியரசன் அவர்களின் எழுச்சிமிகு பேச்சும் மாவீரர் நாள் நிகழ்வை மேலும் சிறப்பாக்கியிருந்தது.

திரு பெ.மணியரசன் அவர்கள் உரையாற்றுகையில் தமிழர்களுக்கான உரிமை கேட்டு ஆயுதமேந்தி போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய இந்த உலகம் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சனநாயவளிமுறையில் போராடினால் தமிழரின் உரிமைக்காக தாங்களும் குரல் கொடுக்கலாம் என கூறிக்கொண்டது ஆனால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்து ஒன்றரை ஆண்டு கடந்த நிலையிலும் உலகம் ஊமையாய் இருப்பதாகவும் மாறாக இதுவரை காலத்தையும் விட ஸ்ரேலின் சாயலில் தமிழர் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார் அதேவேளையில் ஒடிய தேரின் வடத்தை பிடித்து இழுப்பது இலகு எனவும் நின்ற தேரின் வடத்தை இழுப்பதுதான் கடினம் என சுட்டிக்காட்டிய அவர் இந்த காலத்தில் எல்லோரும் கரம்கோர்த்து விடுதலைத்தேரை இழுக்கவேண்டுமெனவும் கூறியுள்ளாh.

அத்தோடு தமிழ்முரசம் வானொலியால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கும் பாராட்டுதல்களையும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.

இதேவேளை நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் மாவீரர்நாள் சிறப்புரையில் உரையாற்றுகையில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழு தொடர்ச்சியாக மனிதநேயபணிகளை செய்து வருவதாகவும் இந்த பணிக்கு இதுவரை பங்களிக்காத மக்கள் பங்களிக்க முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.


%d bloggers like this: