தமிழீழம்

தமிழீழத்தில் மாவீரர் நாள 2010

நவம்பர் 27. தமிழீழ தேசத்தின் விடிவுக்காகவும், எதிர்கால சந்ததியின் வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஈகச் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் உயரிய நாள்;.

எமது தாயகமண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கள் போடப்பட்டிருந்த நிலையிலும் மக்களால் எம் மண்ணின் மைந்தர்களுக்கு ஈகச் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

தாயகத்தை ஆக்கிரமித்து, மாவீரர் துயிலுமில்லங்களை உழுதெறிந்து உடைத்தாலும், எம் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள தாயக இலட்சியக் கனவையும், அக் கனவை நெஞ்சிலே சுமந்து உயிரீந்த மாவீரரின் நினைவையும் எவராலும் அழிக்கமுடியாது என்பதை பறைசாற்றி நிற்கிறது.