Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384

Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700
Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

தென் தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய இடங்களில் மிதி வெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறிய குடும்பங்கள் இதுவரை மீள் குடியேற்றப்படவில்லை என அக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் 2006 ம் ஆண்டு அன்றைய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி திருக்கோவில் பிரதேசத்தில் தற்காலிக இருப்பிடங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்தாக கூறப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட போதிலும் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் தொடர்பாக மக்கள் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதிகாரிகளிடம் அந்த ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை என கஞ்சிக்குடிச்சாறு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரான நல்லதம்பி மகேசுவரன் கவலையுடன் கூறுகிறார்.
1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த தமது கிராம மக்கள் 2003 இல் மீள குடியேறி மீண்டும் 2006 இல் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கும் தற்போது சென்று வர தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரான செல்வராஜா மகேசுவரன் கூறுகிறார்.
“இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாராந்த உலர் உணவு நிவாரணம் கூட தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல தடவைகள் தொடர்பு கொண்ட போதிலும் சாதகமான பதில்கள் இல்லை.” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
தங்களை மீள் குடியேற்ற முன்பு உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துகின்றார்.
இப் பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றும் பணி பூர்த்தியடைந்துள்ளதாக சிறிலங்கா இராணுவ மிதி வெடி அகற்றும் பிரிவினரால் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறும் திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரத்தினம், மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்க அதிபரின் பணிப்புரைக்காக தான் காத்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இவர்களுக்கான வாராந்த நிவாரணமும் நிறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
Du skal logge ind for at skrive en kommentar.