அனைத்துலகம்

"ஆயுததாரி டக்கிளசு தேவாநந்தா தமிழ்மக்களின் பிரதிநிதியல்ல"- BBC

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S.M.Krishna தனது மூன்று நாள் சிறிலங்கா மற்றும் சிறிலங்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ள முக்கிய அரசியல் சூழ்நிலையில், இந்திய உயர்மட்ட அமைச்சர் ஒருவர் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்காது விஜயத்தை முடித்துக்கொண்டுள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் விடயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் கலாநிதி கீதபொன்கலன் BBC தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுக்கின்றமையை உணர்ந்த இந்தியா, தனது கட்டுப்பாட்டை மீள உறுதிப்படுத்த முனையும் நடவடிக்கையாகவும் இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தை பார்க்க முடியுமெனவும் கீதபொன்கலன் கருத்து தெரிவித்ததாகவும் BBC தமிழோசை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழக நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளியும் தமிழ் மக்களின் பிரதிநிதி தான் என தம்பட்டம் அடிக்கும் ஆயுததாரி டக்கிளசை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.