தமிழீழம்

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆயுததாரி டக்கிளசும் இணைவு.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆயுததாரி டக்கிளசின் சிறிலங்கா படையின் ஒட்டுக்குழுவும் இணைந்து செயல்படவிருப்பதாக ஒட்டுக்குழு அறிவித்துள்ளது. இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளதாகவும் EPDP ஒட்டுக்குழு தெரிவித்துள்ளது.

தமிழீழ தேசிய மாவீரர் நாளில் சிறிலங்கா படையினருக்கு பாராட்டு சான்றிதல்கள் வழங்கி நடைபெற்ற விழாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சுரேசு பிரேமச்சந்திரன் மற்றும் மாவை சேனாதிராசாவுடன் டக்கிளசும் கலந்துகொண்டார். நிகழ்வில் சிங்கக்கொடியை ஆயுததாரி டக்கிளசு ஏற்றிவைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு மரியாதை செலுத்தினர்.

அதி உயர் பாதுகாப்பு வலயமென்று எதுவும் யாழ்பாணத்தில் இல்லை என சிறிலங்காவிற்கு நற்சான்றிதல் வழங்கிய யாழ் அரச அதிபர் இமில்டா சுகுமாரும் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டிருந்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களான சம்மந்தர், மாவை சேனாதிராசா மற்றும் சுரேசு பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தியாவின் நிகழ்சி நிரலில் கூட்டமைப்பை தமிழ் தேசியத்திற்கு எதிராக தவறான பாதையில் கொண்டு செல்ல முனைவதை அறிந்த கஜேந்திரகுமார் பொன்னப்பலம் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்திருந்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் சிறிலங்காவால் நாத்ததப்பட்ட தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிறகாக ஐரோப்பாவில் பிரச்சாரம் செய்த சுவிர்சலாந்தில் இருந்து செயல்படும் உடகவியலாளரும் ஊடகமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஒட்டுக்குவும் இணைந்த செயதியை இருட்டடிப்பு செய்த போதும் EPDPயின் செய்தி தமிழ் தேசியக்கூட்டமைப்பை அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில் புலம்பெயர் தேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவுகொடுத்த ஒரு தமிழ் மனிநேய அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பித்தலாட்டங்களை கடந்த மாதம் அம்பலப்பபடுத்தியதுடன் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு கொடுத்தமைக்காக வருந்தியும் இருந்தனர்.