மகிந்தவின் உரையை Oxford Union ரத்துச் செய்துள்ளது.

Home » homepage » மகிந்தவின் உரையை Oxford Union ரத்துச் செய்துள்ளது.

நாளை மகிந்த ராசபக்ச ஆற்ற இருந்த உரையை தாம் ரத்துச் செய்துள்ளதாக Oxford Union அறிவித்துள்ளது. நாளை அங்கே மகிந்த உரையாற்றுவதற்கு எதிராக பிரித்தானிய தமிழர்களால்
நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் ஆற்பாட்டமும் இதனால் மகிந்த தங்கியிருக்கும் விடுதிக்கு முன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ரத்து காரண்மாக தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Oxford Union விடுத்துள்ள அறிக்கை

ஆனால் கோத்தபாயாவின் இணையத்தளம் மகிந்த நாளை Oxford Union  இல் உரையாற்றுவார் என்று தொடர்ந்து தெரிவித்துவருகின்றது.


%d bloggers like this: