சிறிலங்கா

பிரித்தானிய தமிழர்களை பழிவாங்கும் முயற்சியில் சிறிலங்கா.

வரலாற்றில் Oxford ஒன்றியத்தில் 2 தடவை உரையாற்றிய அரசு தலைவர் என்ற பெருமையை பெற்றுக்கொள்ளும் நப்பாசையுடன் அண்மையில் இறுமாப்புடன் பிரித்தானியா வந்த சிறிலங்காவின் சனாதிபதி மகிந்தா 3 நாள் வீட்டுக்காவலில் இருந்துவிட்டு நாடு திரும்பியுள்ளார்.

Oxford ஒன்றியத்தில் 2 வது தடவை உரையாற்ற இருப்பதை பெருமையாக அறிவித்துவிட்டு பிரித்தானியா வந்த மகிந்தா நாடு திரும்பும் பொழுது மாபெரும் வரவேற்பு ஒன்றை வானூர்தி நிலையத்pல் நடாத்த ராசபக்சா குடும்பம் ஏற்பாடு செய்திருந்தது.

ராசபக்சா குடும்பத்தின் கனவுகளை பிரித்தானிய தமிழர்கள் கலைத்து விட்டதாக எண்ணும் சிறிலங்கா அரசாங்கம் பிரித்தானியாவில் வாழும் தமிழர்களை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

போர் குற்றவாளி என சிறிலங்காவின் அமெரிக்க தூதுவராலேயே குற்றம் சுமத்தப்பட்ட மகிந்த ராசபக்ச இன்று சிறிலங்கா திரும்பியதும் லண்டனில் வசிக்கும் ஒரு தமிழரை அனைத்துலக காவல் துறையினரின் தேடுவோர் பட்டியலில் இணைத்துள்ளது.

அனைத்துலக காவல்துறையினரின் தேடுவோர் பட்டியலில் ஒருவரை சிறிலங்கா இணைப்பதால் குறிபிட்ட நபரை அனைத்துலக காவல்துறையினர் தேடுவதாக கருதமுடியாது.

சிறிலங்காவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச நடைமுறைகளை விரயம் செய்வதாகவே கருதமுடியும். சிறிலங்காவில் சட்டங்களை தனது விருப்பத்திற்கிணங்க நடைமுறைப்படுத்தி வந்த சிங்களம் இப்பொழுது சர்வதேச சட்டங்களையும் தனது விருப்பத்திற்கிணங்க நடைமுறைப்படுத்த முயலுகின்றது.

தமிழ் நாட்டு நீதிமன்றத்ததால் தேடப்படும் கொலைக்குற்றவாளி டக்கிளசை தனது அரசாங்கத்தில் அமைச்சராகவும் சுவிர்சலாந்து நாட்டின் நீதிமன்றால் அனைத்துலக காவல்துறையின் தேடுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கொலைக்குற்றவாளி வடிவேலு மகேந்திரத்தை தனது துணைப்படையிலும் சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா நீதிமன்றத்தாலே அனைத்துலக காவவல்துறையின் தேடுவோர் பட்டியலில இணைக்கப்பட்ட கே பி யை உல்லாச மாளிகையில் வைத்து பராமரித்துவருகின்றது.

அனைத்துலக காவல்துறையின் தேடுவோர் பட்டியலை சிறிலங்கா அரசு பிழையாக பாவிப்பதை புலம்பெயர் தமிழர்கள் உடனடியாக தாம் வாழும் நாட்டின் நீதித்துறைக்கு அல்லது நேரடியாக அனைத்துலக காவல்துறையினருக்கு தெரிவிக்கவேண்டும்.