இந்தியா ஒலி-ஒளி

ஜெகத் கசுப்பர் இல்லத்தில் CBI சோதனை!

தமிழ் மையத்தின் இயக்குனர் ஜெகத் கசுப்பரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இந்திய மத்திய குற்றப்புலனாய்வத் துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அருட்தந்தையுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கும் நக்கீரன் ஆசிரியர் காமராஜ் அவர்களது இல்லம் உட்பட 27 இடங்களில் இச் சோதனை நடவடிக்கைகள் ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 spectrum முறைகேடுகள் தொடர்பாகவே இந்த சோதனை நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  spectrum அலைக்கற்றை தொடர்பான முறைகேடுகளுடன் இணைத்துப் பேசம்படும் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் முன்னாள் தகவல்துறை அமைச்சர் ராஜா ஆகியோரின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர் அருட்தந்தை ஜெகத் கசுப்பர் 
என்பது குறிப்பிடத்தக்கது.

 Spectrum அலைக்கற்றை முறைகேடுகள் காரணமாக பதவி விலகிய முன்னாள் அமைச்சர் ராஜாவிற்கு ஆதரவாக அண்மையில் பெரியார் திடலில் இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில், திராவிடர்கழகத் தலைவர் வீரமணி அவர்களுடன் அருட்தந்தை கசுப்பரும் கலந்து கொண்டிருந்தார்.

பெரும் அரசியற் பரபரப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இம் முறைகேடுகளால் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடி பெறுமதியான இழப்பு அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக இந்தியக் கணக்காய்வு அறிக்கை தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இது தொடர்பாக கடும் கண்டனத்தை வெளியிட்டு வருவதுடன் நாடாளுமன்றத்தையும் இயங்கவிடாது தடுத்து வருவரும் குறிப்பிடத்தக்கது.

CBI அதிகாரிகளின் இந்தத் தேடுதல் நடவடிக்கை தி.மு.க வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.