பார்வதி அம்மாவின் அஸ்தி அவமதிக்கப்பட்டதை உலகத்தலைவர்கள் கண்டிக்கவேண்டும்: வைகோ

Home » homepage » பார்வதி அம்மாவின் அஸ்தி அவமதிக்கப்பட்டதை உலகத்தலைவர்கள் கண்டிக்கவேண்டும்: வைகோ

சிறீலங்கா இராணுவத்தினரால் பார்வதி அம்மாவின் அஸ்தி அவமரியாதை செய்யப்பட்டதை உலகத்தலைவர்கள் கண்டிக்கவேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு வை. கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிறீலங்காவின் முப்படை தளபதியாக உள்ள அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவே இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர். இது மிகவும் மோசமான வன்முறையாகும்.

பார்வதி அம்மாவின் அஸ்தியை தனது இராணுவத்தை கொண்டு மகிந்தா அவமதித்துள்ளார். அவரின் இந்த செயலை உலகத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.

அனைத்துலக சமூகம் காலம் தாழ்த்தாது நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். அனைத்துலக விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் சிறீலங்கா அரசு, வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளது. இவ்வாறு சாட்சிகள் அற்ற நிலையில் அங்கு ஒரு இனப்படுகொலையை அது மேற்கொண்டு வருகின்றது.

இனப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


%d bloggers like this: