தமிழீழம்

இராணுவ காவலரணுக்கு அருகில் பாழ் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ். ஊர்காவற்துறையில் உள்ள இராணுவ காவலரண் ஒன்றுக்கு அருகில் இருக்கும் பாழ் அடைந்த கிணறு ஒன்றில் இருந்து உருக் குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இராணுவத்தால் காலையில் மீட்கப்பட்டது.

இச்சடலத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் சில நாட்களாக துர்நாற்றம் வீசி இருக்கின்றது. பொதுமக்கள் இராணுவத்துக்கு முறையிட்டு இருந்தனர்.

துர்நாற்றம் தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையியே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பொதி ஒன்றினால் சுற்றப்பட்டு ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது.