தமிழீழம்

த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல்? – சிறீலங்காவின் சதி

நடு‌க்கட‌லி‌ல் ‌மீ‌‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த இராமே‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை ‌”மீனவ‌ர்க‌ள்” தா‌க்குத‌ல் ‌நட‌த்‌தியு‌ள்ள ‌நிக‌‌ழ்வு ‌மீன‌வ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம் கொ‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது.

இராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌‌ம் இராமே‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்‌க‌ள் 20 பே‌ர் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் இரவு 5 படகுக‌ளி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌க்க கடலு‌க்கு செ‌ன்றன‌ர். நடு‌க்கட‌லி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த அவ‌ர்களை இல‌ங்கை ‌”மீனவ‌ர்க‌ள்” சு‌ற்‌றிவை‌த்து தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

மேலு‌ம் இராமே‌‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்க‌ளி‌ன் வலைகளை இல‌ங்கை ‌”மீனவ‌ர்‌‌க‌ள்” அறு‌த்து‌ கட‌லி‌ல் எ‌றி‌ந்து‌ள்ளன‌ர். இ‌ந்த வலைக‌ளி‌ன் ம‌தி‌ப்பு 5 ல‌ட்ச ரூபா‌ய் எ‌ன்று இராமே‌‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ச‌மீப‌த்தி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 2 பே‌ர் சிறீலங்கா கட‌ற்படை‌யினரா‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் கட‌ந்த மாத‌ம் நாகை, காரை‌க்கா‌ல் ‌மீனவ‌ர்க‌ள் 136 பே‌ர் சிறீலங்கா கட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், இல‌ங்கை ‌”மீனவ‌ர்க‌ள்” மத்தியில் ஆயுதம் தாங்கிய குழுக்களை சிறீலங்கா கடற்படை உருவதக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாயவின் ஏற்பாட்டில் இக்குழுக்கள் இயங்குவதாகவும், இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களையும் கண்காணிக்ககும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சிறீலங்கா கடற்படையினரை தமிழக மீனவர்களுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து இப்படியான வழிமுறைகளில் இறங்கியுள்ளனர்