நீதிக்கான மிதிவணடிப்பயணம் டென்மார்க்கில் இருந்து இன்று ஆரம்பமாகியுள்ளது.

Home » homepage » நீதிக்கான மிதிவணடிப்பயணம் டென்மார்க்கில் இருந்து இன்று ஆரம்பமாகியுள்ளது.

டென்மார்க்கில் வாழும் மனோகரன் மற்றும் பார்த்தீபன் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய தமது மிதிவண்டிப்பயணத்தை இன்று அவர்கள் வாழும் Struer நகரத்தில் இருந்து ஆரம்பித்துள்ளனர். காலை 9 மணிக்கு Struer நகர டென்மார்க் மக்களும் தமிழ்மக்களும் ஒன்றுகூடி மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்துவைத்தனர்.

டென்மார்க் தேசிய ஊடகமும் ஆரம்ப நிகழ்வை பதிவுசெய்தனர். மிதிவண்டிபயணம் ஆரம்பிப்பதற்கு முதலே டென்மார்க் வானொலியில் சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது புரிந்த படுகொலைகள் தொடர்பான செய்தியும் மிதிவண்டிப்பயணம் மேற்கொள்வோரின் செவ்வியும் ஒலிபரப்பானது.

ஆரம்ப நிகழ்வில் கூடியிருந்த டென்மார்க் மக்களுக்கு சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது புரிந்த படுகொலைகள் தொடர்பான துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது. ஆங்கு கூடியிருந்த ஒரு டென்மார்க் அம்மையார் “அவனை (மகிந்தாவை) கூண்டில் அடைப்பதற்கான வழியை செய்” என ஆவேசமாக மிதிவண்டி பயணம் மேற்கொண்டிருக்கும் மனோகரனிடம் கூறினார்.

அங்கு கூடியிருந்த ஒரு சில டென்மார்க் மக்களும் தமிழ் மக்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய மிதிவண்டிப்பயணத்தை மேற்கொள்ளும் மனோகரன் மனோரஞ்சிதன் மற்றும் பார்த்தீபன் தம்பியய்யாவுடன் இணைந்து  Herning நகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்டனர். இன்று பிற்பகல் 3.30 மணியளவில்  Herning  நகரத்தை வந்தடைந்த மிதிவண்டிப்பயணிகளை அங்கு கூடியிருந்த மக்கள் வரவேற்றனர்.

நாளை காலை  Herning  நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் நாளைய பயணம்  Vejle  நகரத்தில் முடிவடையும் என பயணத்தை மேறடகொள்வோர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப நகழ்வில் கலந்துகொண்ட பல டென்மார்க் மக்கள் தாழும் மே18ம் நாள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நடைபெறவிருக்கம் ஒன்றுகூடலில் கலந்து கொள்ள நெதர்லாந்திற்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மிதிவண்டிப்பயண ஆரம்ப நிகழ்வின் ஒளிப்பதிவுகள் எமது வலைத்திரையில் இப்பொழுது ஒளிபரப்பபட்டுவருகின்றது. தொடர்ச்சியாக எமக்கு கிடைக்கப்படும் மிதிவண்டிப்பயண ஒளிப்பதிவுகள் உடனடியாக எமது வலைத்திரையில் ஒளிபரப்பப்படும்.

தொடர்புடைய செய்தி:   டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய மிதிவணடிப்பயணம்


%d bloggers like this: