இந்தியா

நெடுமாறன் அவர்களே! உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம் ஆனால் நீங்கள் சொன்னது எப்படி உண்மையாகலாம்?

உலகம் உருண்டையானது என்று உங்களுக்கு யாராவது விளக்க முயன்றால் அது முட்டாள்த்தனம் என நான் கருதுவேன். அதுபோல், உங்களுக்கு தமிழரின் அரசியலை, குறிப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றை எவராவது எடுத்தியம்ப முனைந்தால் அவர்களுக்கு அறிவே இல்லையென நான் இடித்துக் கூறுவேன். அப்படி உங்களை மதித்து நடந்த எம்மை, உங்கள் வார்த்தைகளால், வேதனைப்பட வைத்துவிட்டீர்களே.

ஒரு பொய்யாவது சொல்லி நொந்துபோய் இருக்கும் எங்களுக்கு நின்மதியைத் தாருங்கள்ய்யா. நீங்கள் ஈழமுரசு, புலத்தில், பதிவு, சங்கதி (www.sangathie.com) என்பவை தேசிய ஊடகங்கள் எனறு கூறிய வார்த்தைகள் உங்கள் உதட்டில் இருந்துதான் வந்ததேயல்லாமல் உங்க்ள் உள்ளத்தில் இருந்து வரவில்லையென்ற உண்மையை உலகத்தமிழருக்கு எடுத்துக்கூறி எமக்கு ஆறுதல் தாருங்களய்யா.

தமிழருக்கு உதவி செய்யும் அத்தனைஅமைப்புக்களையும் அழிக்க அல்லது பலவீனப்படுத்த வீறுகொண்டு நிற்கும் சிஙகள் அரசிற்கும், சிங்கள அரசின் வேண்டுகோளுக்கு செயல் வடிவம் கொடுப்பதையே தம் கொள்கையாகக் கொண்டியங்கும் இந்த உண்மையற்ற ஊடகங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?

இவர்களையா தேசிய ஊடகங்கள் எனறு வர்ணித்தீர்கள். தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள் இந்தத் துரோகிகள் கூட்டத்தை, தமிழருக்கான பாதையில் தமிழுணர்வோடு பயணிப்போம்.

இலங்கையில் இருப்பது ஒரு கருணாவும், ஒரு டக்கிளசும், ஒரு பிளையானும் மட்டுமே. ஆனால், புலத்திலே நூற்றுக் கணக்கான கருணாவும், டக்கிள்சும், பிள்ளையானும் இருக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மற்ந்துவிடாதீர்கள். நீங்கள் வர்ணித்த கூட்டமும் இதில் அடங்குவர்.

நல்லது செய்யும் எந்த ஒரு தமிழனையோ அல்லது தமிழ் அமைப்பையோ ஒரு நாளாவது போற்றாத இந்த ஊடகங்களின் பெயரையும், அந்தப் பெயர்களுக்கான விளக்கத்தையும், அவர்கள் செயற்பாட்டையும் ஒரு கணம் உற்றுப் பாருங்கள்.

ஈழத்தை நோக்கிப் பயணிப்பவர்களுக்கு எதிராக போர் முரசு கொட்டும் ஈழமுரசு பத்திரிகை, புலத்தில் வாழும் தமிழர்களுள் பிரிவினையை உருவாக்கி அதில் குளிர்காயும் புலத்தில் எனும் பத்திரிகை, தமிழருக்கு உதவுபவர்களை பதிவுசெய்து தேவைப்படும் இடங்களுக்கு சேரவைக்கும் பதிவு என்ற் இணையத்தளம், தமிழருக்குள் நடக்கும் சங்கதிகளை சிங்கள அரசு சஙகடமில்லாது பெறுவதற்கான சங்கதி இணையத்தளம். இவைதானய்யா நீங்கள் வாய்தடுமாறி வர்ணித்த தேசிய ஊடகங்கள்.

நீங்கள் எங்களுக்குப் பலத்தைத் தரும் பயில்வான், ஈழத்தமிழரின் நடமாடும் இந்தியகத் தூதரகம். தீயவர்களைக் கண்டால் தூர நிற்பதே மேலல்லவா.

தாகமோ, பசியோ, இரவோ, பகலோ என்று கூடத் தெரியாமல், நாளை உயிருடன் இருப்போமா இல்லையா என ஏங்கி வாழும் உன் தொப்புள்கொடி உறவுகளுக்காக உங்கள் தமிழுணர்வை, சுயரூபத்தை யாருக்காகவும், ஒருபோதும் மாற்றாதீர்கள் என உங்களை உரிமையுடன் கேட்கிறோம்,