புலம்பெயர்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற ஈழத்தமிழரின் தேசியச் சின்னம் "வாகை" வெற்றிக் கிண்ணத்திற்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டி

11.09.2011 அன்று யேர்மன் தலைநகர் பெர்லினில் ஈழத்தமிழரின் தேசியச் சின்னம் “வாகை” வெற்றிக் கிண்ணத்திற்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டி யேர்மன் -பெர்லின் விளையாடுத்துறையால் மிக சிறப்பாக நடாத்தப் பட்டது .இப் போட்டியில் 5 ஈழத்தமிழர்கள் கழகங்களும் விருந்தினர்களாக பங்களாதேஷ் இன இளையோர்களும் ஒரு கழகமாக கலந்திருந்தனர் .

இறுதிப் போட்டியில் நாவலர் இளம்தமிழர் விளையாட்டுக் கழகமும் பங்களாதேஷ் இளையோர்களின் கழகமும் மோதினர் .
இறுதியில் மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் இளையோர்கள் பல சிக்ஸர்களுடன் ஓட்டங்களை பெற்று “வாகை” வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றினர்.

சிங்கள இனவெறி அரசு எம்மை அடியோடு அழிக்கும் திட்டத்தை முறியடிக்கும் முகமாக இப் போன்ற நிகழ்வுகள் ஈழத்தமிழரின் தேசியச் சின்னங்களை பேணும் வகையில் அமைகின்றது .

தகவல்
யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை