திமுகவுடன் விரிசலும் இல்லை; கசப்பும் இல்லை -திருமா

Home » homepage » திமுகவுடன் விரிசலும் இல்லை; கசப்பும் இல்லை -திருமா

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வில்லை. தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கிறோம். தி.மு.க. வுடன் விரிசலும் இல்லை. கசப்பும் இல்லை’’ என்று கூறினார்.

அவர் மேலும், ’’ பா.ம.க. பொதுக்குழுவில் உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தையுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானம் நிறை வேற்றி அழைப்பு விடுத்தது. மாநில செயற்குழுவில் இது குறித்து முடிவு செய்யப்படும். திருச்சி இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை போட்டியிடாது.

பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தையும் இணைந்து திருச்சியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தது. திருச்சி இடைத் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பா.ம.க.வுடன் விடுதலை சிறுத்தை கூட்டணி வைத்து போட்டியிடுவது குறித்து 17-ந் தேதி நடைபெற இருந்த மாநில செயற்குழு கூட்டம் தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

பேட்டியின் போது வன்னியரசு, பாவலன், சங்கத்தமிழன், சேகுவேரா, எஸ்.எஸ்.பாலாஜி உடன் இருந்தனர்.


%d bloggers like this: