டென்மார்க்

தர்ஸ்மன் அறிக்கையுடன் டென்மார்க் தமிழர் பேரவையும் இணைந்துள்ளது.

பிரித்தானியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் நடாத்திய ஒரு கருத்தரங்கில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆற்றிய உரையில் அய்னா நிபுனர் குழுவின் அறிக்கையை தர்ஸ்மன் அறிக்கை எனக்கூறியது புலம் பெயர் தமிழ் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது கண்டனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அய்னா நிபுனர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசு அந்த அறிக்கையை அவமதிப்பதற்காகவே தர்ஸமன் அறிக்கை என அழைக்கவேண்டும் என அறிவித்திருந்தது.

அய்னா நிபுனர் குழுவின் அறிக்கையை தர்ஸ்மன் அறிக்கை எனவே அழைக்க வேண்டும் என கோத்தபாயா உத்தரவிட்டமைக்கமையவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் தர்ஸமன் அறிக்கை என அழைப்பதாகவே புலம்பெயர் தமிழ் மக்கள கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் இன்று டென்மார்க் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என கூறிக்கொள்ளும் டென்மார்க் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து பகுதியிலும் அய்னா நிபுனர் குழுவின் அறிக்கையை தர்ஸ்மன் அறிக்கை என அழைத்துள்ளனர். கோத்தபாயா டென்மார்க் தமிழர் பேரவைக்கும் உத்தரவு கொடுக்கின்றாரா?

இந்த வருட ஆரம்பத்தில் டென்மார்க் தமிழர் பேரவையினர் எனக் கூறி இருவர் டென்மார்க் வானொலி ஒன்றிற்கு செவ்வி வழங்குகையில் பிரித்தானியவர்களே சிங்களவர்களை சிறிலங்காவிற்கு கொண்டுவந்ததாகவும் நாடுகடந்த அரசின் தமைமைச் செயலகம் சுவீடனில் இருப்பதாகவும் டென்மார்க் தமிழர் பேரவை நாடு கடந்த அரசின் ஒரு உப அமைப்பு எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.