சில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

Home » homepage » சில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கைக்கான விஜயத்தினை ஒத்திவைத்ததாக அறிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை) பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கைக்கான விஜயம் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வாசிக்கப்பட்டு வருகின்றது.

Comments Closed

%d bloggers like this: