தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சுமந்திரன்.

Home » homepage » தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சுமந்திரன்.
தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

சிறிலங்கா அரசு தமிழர்களின் வாழ்க்கையுடன் பல்வேறு கோணங்களில் விளையாடி வருகின்றது. இந்த இலட்சணத்தில் அவர்களுடன் இணைந்து நாம் கிரிக்கெட் விளையாடலாமா?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

கிரிக்கெட் விளையாடுவதற்கோ அல்லது கால்பந்து விளையாடுவதற்கோ மக்கள் எம்மை சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. அதனைப் புரிந்து செயற்பட்டால் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று கிரிக்கெட் போட்டி யொன்று நடைபெற்றது. இந்தப் போட்டியை ஐ.தே.க. மாற்றுக்குழுவினரும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பினரும் புறக்கணித்தனர்.

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விளையாடினார். கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்ட போதே அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிரிக்கெட் போட்டியில் பங்கு பற்றாதது குறித்து கட்சி எந்த வொரு முடிவையும் எடுக்க வில்லை. ஆனால், சுமந்திரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கலந்து கொண்டிருப்பார். என்றார் அவர்.

Comments Closed

%d bloggers like this: