அனைத்துலகம்

"இந்தியா மற்றும் சீனா இடையே நல்லுறவு பலமாக உள்ளது": பிரதமர் மன்மோகன் சிங்

இந்தியாவின் நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத் தொடரில், இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகள் எல்லைப் பாதுகாப்பிற்காக ஒற்றுமையாக பணியாற்றுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று(14.12.2011) தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவின் இன்றைய கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா மற்றும் சீனாவின் உறவுகளைப் பற்றி பேசியுள்ளார்.

இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது சீனா, இந்தியா மீது தாக்குதல் நடத்த இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் இந்தியா மற்றும் சீனா நட்பு நாடுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள உறவு வலுவாகவுள்ளதாகவும், இருநாடுகளின் எல்லைப் பாதுகாப்பிற்காக இந்தியாவும், சீனாவும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.