நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற யாழ். மாநகரசபை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் அடாவடி; வியாபாரிகள் கொதிப்பு

Home » homepage » நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற யாழ். மாநகரசபை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் அடாவடி; வியாபாரிகள் கொதிப்பு

யாழ். மாநகரசபை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் இணைந்து இன்று காலை யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் அமைந்திருந்த நடைபாதை வியாபார நிலையங்களுள் சிலவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எதுவித முன்னறிவிப்பும் வழங்காமல் இவ்வாறு கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகர சபையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறையினரின் செயலால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் மாநகர சபைக்கு சொந்தமற்ற தனியாருக்கு சொந்தமான உறுதிக்காணியில் அமைந்திருந்த நடைபாதைக் கடைகளே இவ்வாறு அகற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அடாவடித் தனத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூபா பத்தாயிரம் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாநகர சபையினரும் சிறிலங்கா காவல்துறையினரும் மதிப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் வியாபாரிகளைத் தாக்கியதுடன் தீய வார்த்தைப் பிரயோகத்தையும் பயன்படுத்தினர். இதனால் தாம் மனவருத்தமடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments Closed

%d bloggers like this: