"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது" – அனைத்துலக மன்னிப்புச்சபை

Home » homepage » "நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது" – அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் பிரச்சினைகள் இருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஒப்புக்கொண்டுள்ள போதும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்த சான்றுகளையும் போர் தொடர்பான ஏனைய சட்டமீறல்களும் இந்த அறிக்கையில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கூறியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி,

“நாங்கள் ஏற்கனவே அஞ்சியது போன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்த மனிதஉரிமைகள் நிலைமையை முன்னேற்றுவது தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்டறிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்“ என்றும் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.

Comments Closed

%d bloggers like this: