சிறப்புச்செய்தி புலம்பெயர்

சிறிலங்காவின் சுதந்திர நாளை கண்டித்து யேர்மனியில் கவனயீர்ப்பு..!

சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கண்டித்து சேர்மனி தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல்

சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கண்டித்து சேர்மனி தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல் பிள்வருமாறு>>>

அன்புள்ள புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே ,

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது.
64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.

இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகள் ஒன்றையும் கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை .

நாம் அனைவரும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் எமது வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.

புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக் எடுத்துச் சொல்வோம் . நாம் ஒவ்வொரு தமிழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத்தின் விடுதலை சாத்தியமாகும் . “விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது.”

எம் இனத்தை முழுமையாகத்துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது. தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது. எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது. ஆனால் இன்றோ மிகுந்த நெருக்கடியான ஓர் சூழ்நிலையில் இமயவரம்புகளில் நின்று எம்தேசம் போராடிக்கொண்டிருக்கின்றது.பாரெங்கும் வாழும் தமிழர்களே வரலாற்றுக்கடமை எம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது.

யேர்மனியில் இலங்கை தூதரகத்தின் மற்றும் துணைத் தூதரகத்தின் முன்னால் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வுகள் :

Berlin
Sa, 04.02.2012
9:00 – 12:00 Uhr
Botschaft von Sri Lanka
Niklasstraße 19
14163 Berlin
Vekehrsverbindungen: S1 Mexikoplatz; Bus 118, 629 Niklasstraße

Frankfurt
Sa, 04.02.2012
9:00 – 12:00 Uhr
Konsulat Sri Lanka
Lyoner Str. 34,
60528 Frankfurt / Main