தம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாமென பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை!

Home » homepage » தம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாமென பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் நிபுனர் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீவன் ராட்னர் சிறிலங்காவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதால். சிறிலங்கா மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பேன் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் அமர்வுகளின் போது சிறிலங்காவுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடுமென சிறிலங்கா அரசாங்க தரப்பில் அச்சம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக  நிபுனர் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீவன் ராட்னர் சிறிலங்காவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வறான அழுத்தங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரகடனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“ஸ்டீவன் ராட்னரின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து, ஜெனீவாவிற்கான சிறிலங்காவுக்கான தூதுவர் தமரா குணநாயகத்தினால் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவர், உறுப்பு நாடு ஒன்றுக்கு எதிராக செயற்படும் முதல் சந்தர்ப்பம் இது.”  இவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Comments Closed

%d bloggers like this: