சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுகளில் சர்வதேச அனுசரணை தொடர்பாக த.தே.கூ இடையே முரன்பாடு.

Home » homepage » சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுகளில் சர்வதேச அனுசரணை தொடர்பாக த.தே.கூ இடையே முரன்பாடு.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி உதவி ராஜாங்கச் செயலாளரான கலாநிதி அலிஸா அய்ரெஸை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிறிதரன் ஆகியோர், இவ்விடயத்தில் அமெரிக்கா அனுசரணையாளர் பாத்திரமொன்றை வகிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து கூறிய போது, இத்தகைய சர்வதேச அனுசரணை சாத்தியமானால் அதை தமது கட்சி வரவேற்கும் என்றார். இத்தகைய பாத்திரத்தை வகிப்பது ஐ.நா.வாகவோ, பொதுநலவாய சம்மேளனமாகவோ சார்க் அமைப்பாகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமாகவோ இருக்கலாம் என அவர் கூறினார்.

‘இதில் விருப்பத்திற்குரிய தெரிவு எதுவும் இல்லை. எனினும் சிறிலங்கா அரசாங்கம் தயாரானால் வெளிநாட்டு அனுசரணையாளர் இருப்பதை நாம் விரும்புகிறோம்’ என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். எனினும் இத்தகைய தலையீட்டுக்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை விடுக்கவில்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.

Comments Closed

%d bloggers like this: