முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திரையுலகம் ஏன் வாய்மூடி இருக்கிறது? சரத்குமார் பதில்

Home » homepage » முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திரையுலகம் ஏன் வாய்மூடி இருக்கிறது? சரத்குமார் பதில்

திருச்சிக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத் குமார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் மற்றும் திரையுலகம் ஏன் வாய்மூடி இருக்கிறது; தென்னிந்திய சங்கத்தில் கேரள திரையுலகத்தினரும் உள்ளனர் என்பதாலா?, அப்படி என்றால் தமிழ்த் திரையுலகினர் தொடர்புடைய சங்கம் ஒன்று தேவைப்படுகிறதா என்றெல்லாம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், அப்படி இல்லை. முல்லை பெரியாறு விவகாரத்தில் அவ்வப்போது எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறோம். நானும், இன்னும் சில திரையுலக முக்கியப் புள்ளிகளும் நம் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லியே வருகிறோம். இப்போதைக்கு சங்க ரீதியாக ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை எழவில்லை. மேலும், தமிழ் திரையுலகத்தினருக்கான சங்கம் தேவைப்படவில்லை. காலத்தின் கட்டாயம் என்றால், நிச்சயம் அதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவோம் என்றார்.

Comments Closed

%d bloggers like this: