பிள்ளையானுடன் கூட்டமைப்பு நிச்சயம் பேசும்- பா.அரியநேத்திரன்

Home » homepage » பிள்ளையானுடன் கூட்டமைப்பு நிச்சயம் பேசும்- பா.அரியநேத்திரன்

கூட்டமைப்பு நிச்சயம் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையானுடன் பேசவுள்ளது, இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பேசுவதனால் மட்டும் பிள்ளையான் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டதாக அர்த்தமில்லை பேசுவதற்கும் இணைத்துக்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பிள்ளையான் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் விரைவில் பேசவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக கேட்டபோதே தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக மேற்கண்ட கருத்துக்களை பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

Comments Closed

%d bloggers like this: