கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகளை நேசக்கரம் வழங்கியுள்ளது.

Home » homepage » கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகளை நேசக்கரம் வழங்கியுள்ளது.

24.01.2012 கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில்அவதிப்படுகிற கைதிகளுக்கான முதற்கட்ட அவசர உதவியாக சாரம், பற்பசை, பற்தூரிகை சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கட் பக்கற் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் , விநாயகமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

கைதிகளை நேரில் சென்று பார்வையிட்ட செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் புலம்பெயர் சமூகத்தினரிடமிருந்து மேலதிக உதவிகளை வழங்குமாறும் அவர்களது விடுதலை தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

உதவியைப் பெற்றுக் கொண்ட கைதிகள் சார்பாக மூவர் கருத்துத் தெரிவிக்கையில் தமது விடுதலைக்கான புலம்பெயர் சமூகம் ஆதரவழித்து தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். இன்னொரு முள்ளிவாய்க்காலைச் சந்தித்து உயிர் தப்பியதாகத் தெரிவித்த மற்றொரு கைதியொருவர் தமக்கான நீதிமன்றுக்குச் செல்லும் ஆடைகள் யாவையும் இழந்து தவிக்கிற தமக்கு ஆடைகள் தந்துதவுமாறு புலம்பெயர் உறவுகளிடம் வெண்டுகோளொன்றையும் விடுத்துள்ளார்.

மேலும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இடமாற்றம் செய்யப்பட்ட மேலும் 25கைதிகளும் மாற்றுடைட பற்பசை பற்தூரிகை போன்ற உதவிகளை வழங்கியுதவுமாறு வேண்டியுள்ளனர். மேலதிகமாக மேலும் பல அடிப்படைத் தேவைகளின்றி அவலப்படுகிற எங்கள் உறவுகளுக்கு உங்கள் நேசக்கரத்தை நீட்டி ஆதரவழிக்குமாறு நேசக்கரம் உலகுவாழ் தமிழர்கள் அனைவரையும் வேண்டுகிறது.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

வங்கிமூலம் உதவ – Bank information

Germany: NESAKKARAM e.V. 55743 Idar-Oberstein Konto-Nr. 0404446706 BLZ 60010070 Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V A/C 0404446706 Bank code – 60010070 IBAN DE31 6001 0070 0404 4467 06 Swift code – PBNKDEFF Postbank Stuttgart Germany பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள – Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany

Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com Skype – Shanthyramesh

Vereinsregister: AZ- VR 20302 Amtsgericht 55543 Bad Kreuznach Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Comments Closed

%d bloggers like this: