புலம்பெயர் முக்கிய செய்திகள்

ஜநா முன்றலில் போருக்கு தயாராகும் தமிழ்க்குழுக்கள்.!

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

ஜநா மனிதவுரிமை அமைப்பின் 19வது கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு புரிந்த வன்முறைகள் மற்றும் மனிவுரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயப்படலாம் என செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஜநா மனிதவுரிமை அமைப்பின் கூட்டம் நடைபெறும் போது தமிழர்கள் ஒன்று கூடுவது வழமை. ஆனால் இம்முறை கேபி எனப்படும் குமரன் பத்மநாதனால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினராலும் தமிழீழவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் முன்னணி அமைப்புக்களை சேர்ந்தவர்களாலும் இந்த ஒன்றுகூடல் வேவ்வேறு நாட்களில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருகுழுக்களும் 2 நடைப்பயணத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர். கேபியின் நாடுகடந்த அரசை சார்ந்தவர்கள் பிரிந்தானியாவில் இருந்து ஆரம்பிக்கும் நடைப்பயணம் ஜெனிவாவை வரும் 27ம் நாள் வந்தடையும் எனவும் அன்று அங்கே அவர்களால் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சார்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெல்லியத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் தமிழீழவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் நடைப்பயணம் ஜெனிவாவை மார்ச் 5ம் நாள் (அதாவது கேபியின் நாடுகடந்த அரசின் ஒன்றுகூடல் நடந்து ஒரு கிழமையில்) வந்தடையும் எனவும் அன்று ஓன்றுகூடல் அங்கே நடைபெறும் எனவும் இவர்கள் ஆதரவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாடு கடந்த அரசின் நடைப்பயணத்தை போட்டி நடைப்பயணம் என குறிப்பிட்டிருக்கும் பதிவு இணையத்தளம் வழமைபோல் சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்களால் குறி வைக்கப்படும் ஜெனிவா போர்க்களம் எனவும் குறிபிட்டுள்ளது. பாரிசை சேர்ந்த தமிழ் வர்த்தகசங்கத்தினரும் தாம் நாடு கடந்த அரசின் நடைப்பயணத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளதாக பதிவு இணையம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜநா மனிதவுரிமை அமைப்பின் 18வது கூட்டத்தொடர் நடைபெற்ற போது நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை தமிழர் ஒருகிணைப்பு குழுவிற்கு மக்களிடம் உள்ள ஆதரவை வெளிப்படுத்துவதாக பதிவு இணையம் அப்போது வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவீர் நாள் கயிறுழுத்தலைத் தொடர்ந்து இப்பொழுது மனிதவுரிமை போராட்டமும் எமக்குள்ளே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் மீது இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசிற்கெதிரான போராட்டம் வலுவடையாவிட்டாலும் தமிழ் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் வலுவடைந்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.