ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களுக்கு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இரங்கல்!

Home » homepage » ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களுக்கு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இரங்கல்!

22.02.2012 அன்று சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் அவர்களுக்கு எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம். இதே போன்று இறுதிக்கட்ட யுத்தமாகக் கூறப்படும் 2009 மே காலப்பகுதியில் நிகழ்ந்த வெள்ளைக்கொடிப் படுகொலையிலும் இத் துணிகர ஊடகவியலாளரான மேரி கொல்வின் அம்மையார் முக்கிய சாட்சியாக இருந்தார். எம்மைப் போன்று ஒடுக்கப்படும் இனத்தின் உண்மைச்செய்திகளை வெளிக்கொண்டுவர பாடுபட்டு தனது வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்த இந்த துணிகர ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் இழப்பு உண்மையும் நீதியும் மறுதலிக்கப்பட்ட எம்போன்ற அடக்கப்படும் இனங்களுக்கு ஈடுசெய்ய முடியததாகும்.

இவரின் பிரிவிற்கு தமிழ் மக்களாகிய நாம் ஒருகணம் தலைசாய்க்கின்றோம். இவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அம்மையாரின் குடும்பத்திற்கும் அவர் சார்ந்த ஊடக நிறுவனத்திற்கும் உலக ஊடகவியலாளருக்கும் தமிழீழ மக்கள் சார்பிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சார்பிலும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களின் கரங்களை உண்மை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றோம்.

இவ்வாறு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Closed

%d bloggers like this: