மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.

Home » homepage » மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.

அமெரிக்கா தலைமையில சிறிலங்கா அரசு மீது ஜநா மனிதவுரிமைக் கூட்டத்தில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்போவதான ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. சிறிலங்கா அரசும் அதேபோன்று தனது பிரச்சாரத்தை சிறலங்காவில் பரப்பிவருகின்றது. சிறிலங்கா அரசிற்கெதிராக விலைவாசி ஏற்றத்தை எதிர்து நடைபெற்றுவரும் சிங்களவர்களின் போராட்டங்களை முறியடிக்கவும் சிறிலங்கா அரசு இந்த யுத்தியையே பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் இனவாத அமைச்சர்கள் சிறலங்கா மீது மேற்குலகம் அழுத்தம் பிரயோகிப்பதாக பரப்புரை செய்து போராட்டங்களில் ஈடுபடும் சிங்களவர்களின் போராட்டங்களை மேற்குலகத்தின் மீது திசைதிருப்புகின்றது.

அதேபோல் சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியருடாக அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்களை இன்று சிறிலங்காவில் ஆரம்பித்துள்ளது.

ஆனால் உண்மையில் ஜநா மனிதவுரிமை கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானம் சிறிலங்காவிற்கு நெருக்கடியை கொடுக்குமா என்பது கேள்விக்குறியானது. ஏற்கனவே இந்த தீர்மானத்தை சிறிலங்கா அரசும் இணைந்து தான் தயாரித்தள்ளதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமேந்திரனும் தீர்மானம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்சாவால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரித்துரைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றும் படியே இந்த அமெரிக்காவின் தீர்மானம் அமையப்போகின்றது. கூடுதலாக இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசிற்கு காலகெடுவொன்று விதிக்கப்படலாம்.

தமிழ் மக்கள் எதிர்பார்பது போன்று இந்த தீர்மானத்தில் போர் குற்றம் என்றோ இனப்படுகொலை என்றோ எந்த சொர்பதங்கள் கூட அமையப்போவதில்லை.

அமெரிக்கா கொண்டு வரபோவதாக கூறப்படும் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியப்போவதுமில்லை. கூடுதலாக தென் அமெரிக்க நாடு ஒன்று அல்லது பெல்யியம் நாடே இந்த தீர்மானத்தை முன்மொழிய விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா சனதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு இந்த தீர்மானத்தின் ஊடாக ஜநா வால் அங்கீகாரம் வழங்கப்பட இருக்கின்றது.

2009ம் தமிழ் மக்கள் பாரிய இனப்படுக்கொலைக் உள்ளான போது தமிழ் மக்களின் சனநாயக போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக மேற்குலக நாடுகளால் இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசே போரில் நடந்ததாக கூறப்படும குற்றச்சாட்டுகளை விசாரிக்கவேண்டி தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஆந்த தீர்மானத்தையும் சிறிலங்கா அரசு தனது இடதுசார நட்பு நாடுகளின் உதவியுடன் முறியடித்தது.

Comments Closed

%d bloggers like this: