தமிழ்த் தலைமைகள் பங்கு வகிக்காத எந்தவொரு சர்வதேச அமர்வுகளும் தமிழர்களுக்குச் சாதகமாக மாறப் போவதில்லை – கஜேந்திரகுமார்

Home » homepage » தமிழ்த் தலைமைகள் பங்கு வகிக்காத எந்தவொரு சர்வதேச அமர்வுகளும் தமிழர்களுக்குச் சாதகமாக மாறப் போவதில்லை – கஜேந்திரகுமார்

தமிழ்த் தலைமைகள் பங்கு வகிக்காத எந்தவொரு சர்வதேச அமர்வுகளும் தமிழர்களுக்குச் சாதகமாக மாறப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

போரின் இரு தரப்பான ஒரு தரப்பின் போரின் விசாரணையை ஒப்படைக்கும் அமெரிக்காவின் தீர்மானம் எமக்குச் சாதகமானதல்ல. தமிழர் பெயரில் செய்யப்படும் ஒரு விடயம் தமிழருக்கு நன்மையளிக்காத விடத்து அதனை தமிழர் தரப்பும் தமிழர் தலைமையும் சுட்டிக்காட்டவேண்டும். அந்த மாநாட்டில் எங்கள் பங்கு வகிக்கப்படாத விடத்து ஜெனிவா மாநாடு எமக்குச் சாதகமாக மாறப் போவதில்லை. தமிழர்கள் பங்கெடுக்காதவரை அது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக சர்வதேசத்திற்கு ஒரு கருவியாகவே மட்டுமே பயன்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினர்.

காலப்போக்கில் சர்வதேசம் மாற்றமடைந்து தமிழருக்கு சார்பாக ஒரு செயற்பாட்டில் இறங்குமாயின் – அது எவ்வாறு அமையவேண்டுமென்று இப்போதே தமிழர் தரப்பு சுட்டிக்காட்ட வேண்டும். சுட்டிக்காட்டுவதுடன் அதில் ஆணித்தரமாக தொடர்ந்து நிலைத்து நிற்கவேண்டும். இல்லையேல் மீண்டும் மீண்டும் எங்கள் விடயம் – எங்கள் நலன் சார்ந்ததாக சர்வதேசத்தால் பயன்படுத்தப்படமாட்டாது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினர்.

Comments Closed

%d bloggers like this: