நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி

Home » homepage » நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

பரிந்துரைகளை எவ்வாறு எப்போது அமுல்படுத்தப்படும் என்பதனை விளக்குமாறும், அதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொழில்நுட்பசார் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதனை இலங்கைக்கு அறிவிக்கும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

அரசாங்கம் மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றது.

அரசாங்கம் ஜனநாயக விரோத செயல்பாடுகளிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த காலங்களை விடவும் தற்போது நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

உலக நாடுகள் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்துவதனை தவறாகக் கருதக் கூடாது.

அன்று சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்திருக்காவிட்டால் இன்று அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பலர் உயிருடனேயே இருந்திருக்க மாட்டார்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியை நிறுத்த முயற்சிப்பதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Comments Closed

%d bloggers like this: