இந்தியா

ஜெயலலிதாவின் எச்சரிக்கையால் பணிந்தது கேரளா!

முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப்பதற்காக மத்திய ஆய்வுக் குழு வினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அணையின் பலத்தை ஆராய போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள போலீசார் தடுப்பதாகவும், எனவே அங்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழக போலீசாரை அங்கு நிறுத்தவேண்டியது வரும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இதன் எதிரொலியாக,முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப் பதற்காக மத்திய ஆய்வுக்குழுவினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.