நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.

Home » homepage » நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

உற்பத்தி பாவனைக்கான அன்பளிப்புக்களான றைஸ்குக்கர் , பாத்திரங்கள் சிலவற்றையும் நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் அன்பளிப்புச் செய்திருந்தனர். நேசம் நிறுவனத்திற்கான பெயர்ப்பலகைக்கான செலவினை பொது சுகாதார பரிசோதகர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நிகழ்வுக்காக பெறப்பட்ட வாடகைக்கதிரைகளுக்கான செலவினை கணேஸ்வித்தியாலய அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேசம் உற்பத்தி நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சிக்கும் தொழில் அற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுமென்ற நல்நோக்கத்தை வரவேற்றுப்பேசிய உத்தியோகத்தர்கள் நேசம் உற்பத்தியின் வளர்ச்சியில் தமது ஆதரவுகளையும் வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

நேசம் உற்பத்திகளில் கிடைக்கிற வருமானத்தில் ஒரு பெகுதி கல்வியில் பின்தங்கிய ஊர்களில் வாடும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முன்னோடிப் பரீட்சைகளையும் நடாத்த செலவு செய்யப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதர மாவட்டங்களுக்கும் நேசம் உற்பத்திகள் விரிவாக்கம் செய்யப்படுமெனவும் நேசம் உற்பத்தி நிர்வாகக் குழுவினர்களால் தீர்மானிக்கப்பட்டது.

Comments Closed

%d bloggers like this: