புலம்பெயர் முக்கிய செய்திகள்

தமிழீழ மாணவர் எழுச்சிநாள் – நோர்வே

தமிழீழ மாணவர் எழுச்சிநாள் - நோர்வே
தமிழீழ மாணவர் எழுச்சிநாள் - நோர்வே

தமிழீழ மாணவர் எழுச்சிநாள் நோர்வே ஒஸ்லோ நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழ் இளையோர் நடுவத்தினரால் , 10 /06/2012 அன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் இளையோர் நடுவத்தின் ஆரம்பநாளாகவும் இது அமையபெற்றிருந்தது. நிகழ்வினை முல்லை நிசாந்தன் அவர்கள் தொகுத்து வழங்க பொதுச்சுடறேற்றலைத்தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்வின் பொதுச்சுடரினை சட்டவாளர் Steinar Stenvaag ஏற்றிவைக்க தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் திருவுருவபடத்திற்க்கான மலர்மாலையினை நோர்வே தமிழ் இளையோர் நடுவ இணைப்பாளர் திரு. மேனன் அவர்கள் அணிவித்து ஈகைச்சுடரினையும் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து இதே நாளில் வீரச்சாவினை தழுவிய மாவீரர்களான லெப்.கேணல் அன்பு/அம்மா, லெப்.கேணல் சாள்ஸ், லெப்.கேணல் டேவிட் ஆகியோரின் திருவுருவ படங்களிற்கு இளையோர் நடுவத்தினை சேர்ந்த கௌதமன், மற்றும் ரோசந்தன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடறேற்றினர்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் நின்றுவந்த போராளிகளின் நினைவுப்பகிர்வுகளுடன் சமகால அரசியல் நிலைபாடுகளும் விளக்கப்பட்டன.

இந்நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக கரிகாலன் ஈற்றேடுப்பு நூல் வெளியிடு, மற்றும் வல்லமை தரும் மாவீரம், மாவீரர் புகழ், இலட்சியம் வெல்வோம் ஆகிய இறுவெட்டுக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தாயக எழுச்சிப்பாடல்கள், எழுச்சிநடனங்கள், என்பன இளையோர்களால் வழங்கப்பட்டு எழுச்சிமிக்க உறுதி உரையுடன் இனிதே நிறைவடைந்தது.