இந்தியா

இந்தியாவில் எங்குமே இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது!- கனிமொழி எம்.பி.

இலங்கை படையினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி கொடுக்கக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்பேரில் நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக இங்கு வந்துள்ளேன்.

டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையின் பார்வைக்கும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்து வருகிறார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.

இந்தியாவில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க கூடாது.

மறைமுகமாக எங்காவது பயிற்சி அளிக்கப்பட்டால் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.