தமிழீழம்

பலாலி பாதுகாப்பு வலயத்தினை நிரந்தரமாக பேண மீண்டும் முன்னரங்கப் பகுதிகளில் நிரந்தர முட்கம்பி வேலிகள்

பலாலி பாதுகாப்பு வலயப்பகுதியினை நிந்தரமாக பேண ஏதுவாக மீண்டும் முன்னரங்கப் பகுதிகளை சூழ நிரந்தர முட்கம்பி வேலிகளை அமைக்க பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு வலயப்பகுதியின் கிழக்கு புறமாக தொண்டமனாறு கடல் நீரேரிப்பகுதிக்கு மேற்குப்புறமாக பாரிய நிரந்தர முட்கம்பி வேலிகள அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான படையினர் கடந்த சில நாட்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலாலி விமான நிலையத்தையண்டிய பகுதிகளிலுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளை நிரந்த ஆள் நடமாட்டமற்ற பாதுகாப்பு வலயமாக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.

ஓட்டகப்புலம் முதல் மயிலிட்டியை அண்டிய பாம் பீச் வரை இம்முட்கம்பி வேலிகளை அமைக்க பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது. அண்மையில் பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டு இவற்றில் சில பகுதிகளை விடுவிப்பதில் பாதுகாப்பு தரப்பு ஈடுபட்டிருந்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் மீண்டும் ஆக்கிரமித்தே இப்புதிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே பெரும் பிரச்சாரங்களுடன் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தமது காணிகளை அண்மையிலேயே திருத்தம் செய்திருந்த இடம்பெயர்ந்த மக்கள் சூறையாடப்பட்ட தமது வீடுகளின் எஞ்சியுள்ளவற்றை மீளக்கட்டவும் தொடங்கியிருந்தனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுள் இருந்த வீடுகளும் இச்சுவீகரிப்பினுள் சென்றுள்ளது. அதே போன்று ஓட்டகப்புலம் முதல் வசாவிளான் வரையான பகுதிகளை இணைக்கும் வகையினிலான பாதையொன்றை அமைதது எஞ்சிய பகுதிகளை இணைக்கும வகையில் பாதுகாப்பு வலயத்திற்கான முட்கம்பி வேலிகளை அமைக்க பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது.

படைத்தரப்பின் முயற்சிகள் இடம்பெயர்ந்த மக்களிடையே மீள்குடியமர்வு தொட்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. பலாலி மயிலிட்டியுட்பட்ட பெரும்பகுதிகளை படைத்தரப்பு தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டின் கீழேயே வைததிருகக முயல்கின்றமை குறிப்பிடத் தக்கதாகும்