தமிழீழம்

சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்!

யாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.இச்சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.

ஆனைப்பந்தியில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ் விடுதியில் 20 சிங்கள தாதியர்கள் தங்கியிருந்துள்ளனர்.நள்ளிரவு நேரம் உட்புகுந்த இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் காயமடைந்த தாதியர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.