இந்தியா

தமிழகத்தின் ஆட்சிக்கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்செய்ய வேண்டும்!- சுப்பிரமணிய சுவாமி

இந்திய தேசிய கொள்கையில் தலையிடுவதை தமிழக அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரியுள்ளார்

அத்துடன் தமிழகத்துக்கு வரும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்

இந்தநிலையில் இந்திய தேசியக்கொள்கையை எதிர்காலத்தில் மீறினால், தமிழகத்தின் ஆட்சிக்கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதற்கிடையில் மத்திய பிரதேசத்திற்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவரை கைதுசெய்ய வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி மத்திய பிரதேச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்