அடியாட்களை வைத்து மிரட்டும் டென்மார்க் கி. செ. துரை

Home » homepage » அடியாட்களை வைத்து மிரட்டும் டென்மார்க் கி. செ. துரை

சிங்கள இனவெறி அரசின் தாக்குதலால் அல்லலுறும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று தமிழக திரைப்பட நடிகர் சங்கத்தால் அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்பட்டிருக்கும் நிலையிலும், புலம்பெயர் நாடுகளில் தமிழீழ மக்களால் முன்னேற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு தமிழீழ மக்களின் துயர்புடைப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையிலும், டென்மார்க்கில் குதூகலமாக நேற்று வெளியிடப்பட்ட கி செ துரையின் திரைப்படத்திற்;கு டென்மார்க் தமிழ்மக்கள் மத்தில் ஒரு எதிர்ப்பலை கிளம்பியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக இளம் சமூகத்தினர் இணையத்தளங்களிலும் குறும் செய்தி ஊடாகவும் தமது எதிர்ப்பை தெரித்திருந்தனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட கி. செ. துரை தனது சாகாக்கள் ஊடாக சிலரை மிரட்டியுள்ளார். நேற்று சுவீடனில் இருந்து கதைப்பதாக தன்னை “யனகன்” என அறிமுகப்படுத்தியவர் தகாத வார்த்தைகளை கூறியவுடன் “நாச்சிகுடா போய்விட்டது விரைவில் கிளிநொச்சியும் போய்விடும்” என கூறியுள்ளார். அத்துடன் குறிப்பிட்ட ஒரு ஊரை கூறி, இதனால் தான் திரைப்படத்தை புறக்கணிக்கின்றீர்களா எனவும் வினாவினார். தொலைபேசியில் கதைத்தவர் லண்டனில் இருந்தே கதை;ததுள்ளதை அவரது தொலைபேசி இலக்கம் வெளிப்படுத்தியுள்ளது. தொலைபேசி இலக்கம் 00447951428767 சுவீடனை சேர்ந்ததாக தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட்டவர் அதே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு குறும் செய்தி தொடர்பாக கதைக்கில் அது அனுப்பப்பட்டதாக கூறப்படும் ஒரு கைத்தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளாமல் ஏன் ஒரு வீட்டு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டீர்கள் என கேட்ட போது தான் இணையத்தில் எடுத்ததாக கூறினார். ஆனால் மிரட்டப்பட்டவரின் வீட்டு தொலைபேசி இலக்கம் இணையத்தில் எடுக்கமுடியாது, டென்மார்க்கில் இருந்தே ஒருவர் தன்னுடைய வீட்டுத் தொலைபேசி இலகத்தை கொடுத்து தன்னை மிரட்டுவதற்கு தூண்டியிருப்பது போன்று இது தென்படுவதாக கூறியபோது தான் திரும்ப தொடர்புகொள்வதாக ஆங்கிலத்தில் கூறி இணைப்பை துண்டித்துகொண்டார் “யனகன்”.

தனது திரைப்படத்திற்;கு ஆதரவு கிடைக்காவிட்டால் அதற்கான காரணங்களை தெரிந்துகொள்வதை தவிர்த்து அடியாட்களை வைத்து மிரட்டல் விடுவதாலோ, அல்லது ஒரு சிலர் மீது தாக்குதல்களை செய்வதாலோ கி. செ. துரை ஆதரவை பெற்றுகொள்ள முடியாது. மாறாக நாளை மிரட்டல் விட பயன்படுத்திய தொலை பேசி இலக்கம், தொலைபேசி உரையாடல் பதிவு என்பன காவல்துறையினரிடம் கொடுக்கப்படுவதுடன், டென்மார்க் ஊடகங்களில் மிரட்டி திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம் என செய்தி வரும் போது சில வேளை பலமான ஆதரவை கி. செ. துரை பெற்றுக்கொள்ளமுடியும்.

சர்சைக்குரிய கி சே துரையின் “இலங்கையில் நடக்கும் போருக்கு காரணம் சிங்கள அரசுஅல்ல தமிழ் சினிமாவே காரணம்” என்ற சென்னையில் பேசிய பேச்சு.

“தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.”-சாந்தி ரமேஷ் வவுனியன் –


%d bloggers like this: