தமிழீழம்

பிச்சைகாரரின் நாடாகும் தமிழீழம்.

2009 ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் எம் தமிழீழத்தில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்று தமிழீழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு,திருகோணமலை, மன்னார், அம்பாறை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது,

2009 மே மாதம் யுத்தம் முடிவடைய முன்னர் வன்னியில் தலைவர் பிரபாகரனின் காலத்தில் எவருமே பிச்சை எடுக்க முடியாத நிலைமை இருந்தது. அதனையும் மீறி யாராவது பிச்சை எடுத்தால் உடனே விடுதலைப்புலிகளின் முதியோர் காப்பக பிரிவினர் அவர்களை மீது தமது முதியோர் இல்லங்களில் சேர்த்து கவனிப்பார்கள்.

அதாவது வன்னியில் எவரும் பிச்சை எடுக்க கூடாது என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்து வந்தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் இந்த நிலைமை மாறி தமிழீழ மாவட்டங்களின் நகரப்புறங்களில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பிச்சை எடுக்கும் செயல்ப்பாட்டனது மிகவும் வேதனை அளிக்கின்ற விடயமாகும்.. பிரபாகரனின் காலத்தில் வசதியாக இருந்த என் தமிழர் எல்லாம் இப்போது கவனிப்பாரற்ற நிலையில் ஈழத்திலே அலைந்து திரிகின்றனர். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எம்மை நாமே ஆண்ண்டாலே ஒழிய எவரும் எமக்காக உதவி செய்ய முன் வரப்போவதில்லை.

யாழ்ப்பாணத்தில் பல நூற்றுக்கணக்கான யுவதிகள் இளவயதில் கர்ப்பம் தரித்து கையில் குழந்தையுடன் பிச்சை எடுக்கின்றனர். இதற்கு காரணம் எம் தமிழீழத்தில் இடம் பெறும் கலாச்சார சீர்கேடாகும். இதற்கு துணை போவது யார்? இலங்கை அரசுடன் சேர்த்து இயங்கும் அரசியல் கட்சிகளும், ஒட்டுக்குழுக்களுமே ஆகும்,

எனினும் ஒரு வேதனைக்குரிய விடயம் என்னவெனில் பிச்சை எடுப்பவர்களின் தூரத்து உறவுகள் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் சுகபோகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதாகும். புலம் பெயர்ந்த தமிழர்களே நீங்கள் ஒருகணம் சிந்தியுங்கள் உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு என்ன கோபம் இருக்கலாம். ஆனால் உதவிக்கரம் நீட்டுங்கள் நீங்கள் நீரடியாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமாகவோ உதவுங்கள். ஏனெனில் எம் உறவுகள் வன்னியில் பட்டதுயரம்போல் இந்த உலகத்தில் எவரும் அனுபவிக்கவில்லை. என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

வன்னியில் பல இளைஞர்கள் இன்று பிச்சை எடுத்து திரிகின்றனர் என்றால் பாருங்கோ எம் தமிழீழம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறது என்று? எமது அண்ணன் பிரபாகரன் எம்முடன் வெளியாகவே இருந்திருந்தால் எமக்கு இந்த நிலை வருமா? என்று இன்று பல தமிழ் மக்கள் தம்மிடையேயும் தமது நண்பர்களிடேயே புலம்புகின்ற தன்மையினை காணாக்கூடியதாக உள்ளது.

வசதி படைத்த எம் தமிழ் உறவுகளே தமிழ் பாரம்பரியம் என்று சொல்வது நாம் சுக போகங்களுடன் வாழ்வது மட்டுமல்ல எம் உறவுகள் துன்பம் அடையும் போதெல்லாம் அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் அதுவே எம் உறவுகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும். உறவுகளே எம் தமிழீழம் பிச்சைக்கார நாடாக மாறிக்கொண்டு போகின்றது.

புலம்பெயர்ந்த நீங்கள் எவரும் இங்கு சமாதானம் பிறந்து விட்டது, யுத்தம் முடிந்து விட்டது இனிமேல் இலங்கையில் உள்ளவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம், முடிந்தது யுத்தம்தான். முடியவில்லை எம் துயரங்கள். எம் அண்ணன் எம்மோடு இல்லாத வலியினை நாம் இப்போது அணுஅணுவாக அனுபவித்துக்கொள்கின்றோம்.

கடைசியாக உங்களுக்கு ஒருவிடயத்தை சொல்லுகின்றோம் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சந்தோசமாக வாழ முடியும். தமிழ் அரசியல் வாதிகளால் ஒரு போதும் விடுதலை என்பது கிடையாது,. சிங்களவன் சிங்களவன்தான் அவன் எமக்கு நல்லவன் போல நடித்து கொள்ளும் போது சில கெட்ட முறை தமிழர்கள் மயங்குகிறார்கள் அதனால்தான் நாம் துன்பத்தை அனுபவிக்கிறோம் இனிவரும் எம் சந்ததியாவது ஒற்றுமையாக உரிமைக்காக உண்மையாக குரல் கொடுங்கள் கட்டாயம் நாம் சுதந்திர தமிழீழத்தில் நின்மதியாக வாழலாம்.

-தமிழீழத்தில் இருந்து என்றும் உங்கள் வேந்தன்-