"31-12-2012 முன் ஒன்றுபடுங்கள்"!- எல்லாளன் படை அறிவுறுத்தல்.

Home » homepage » "31-12-2012 முன் ஒன்றுபடுங்கள்"!- எல்லாளன் படை அறிவுறுத்தல்.

புலம்பெயர் தேசத்தில் தமிழீழவிடுதலை போராட்டத்தை இரண்டுபடுத்துவதை இவ்வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவருமாறும், சொத்துக்களை முடக்குவதற்காக மற்றவர்களுக்கு துரோகிப்பட்டங்கள் கொடுப்பதை உடன் நிறுத்துமாறும் தமிழீழ எல்லாளன் படை அறிவித்துள்ளதாக சில இணையளத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிபிட்ட இணையத்தளங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக எல்லாளன் படையின் அறிவித்தல் கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

31-12-2012 முன் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்படாவிட்டால் கடுமையான நிர்வாகரீதியான நடவடிக்கைகளை தாம் எடுப்போம் என தமிழீழ எல்லாளன் படை மேற்படி அறிக்கையில் எச்சரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் இதே எல்லாளன் படையால் வெளியிடப்பட்டதா கூறி “‘தேசத் துரோகத்தனத்தை நிறுத்துக’.எச்சரிப்புடன் கூடிய தமிழீழ எல்லாளன் படையின் துண்டுப்பிரசுரங்கள்.” என தலைப்பட்டு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ எல்லாளன் படையால் இன்று வெளியிடப்பட்டதாக கூறப்படும் அறிக்கையின் முழுவடிவம் வருமாறு.:>>>>

அன்பார்ந்த புலத்தில் உள்ள தமிழ் செயல்பாட்டாளர்களுக்கும் புலத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தமிழீழ எல்லாளன் படை விடுக்கும் அவசரமானதும் அவசியமானதுமான கோரிக்கை.

தாயகத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு தலைமைகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பின்னர் புலத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கருத்துக்கள் தரிவிப்பதும் நிகழ்வுகள் நடத்துவதும் கடந்தகால போராட்டத்திற்கும் தமிழினத்திற்க்கும் மிகப்பெரும் இழிவாக உள்ளது தங்களிடம் உள்ள சொத்துக்களை முடக்குவதற்காக பொய்யான செய்திகளை பரப்புவதும் மக்களைக்குழப்புவதும் துரோகப்பட்டம் வழங்குவதும் எல்லைதாண்டிச்செல்கிறது எனவே இவை அனைத்தையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளவும்.

குறிப்பாக 31.12.2012க்கு முன்னதாக தங்களின் கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு கண்டு ஒரு குடையின் கீழ் செயல்பட வேண்டுகிறோம். தொடர்ந்தும் புலத்திலுள்ள சட்டப்போர்வையின் துணிச்சலில் தங்கள் நடவடிக்கைகள் தொடருமாயின் நிர்வாகரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
தமிழீழ எல்லாளன் படை

Comments Closed

%d bloggers like this: