புலம்பெயர் முக்கிய செய்திகள்

புலம் பெயர் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் ஈஎன்டிஎல்எப் ஆதரவு அதிர்வு இணையம்.

தமிழ் இணையங்களிடையே சுத்துமாத்து இணையம் என பிரபல்யம் அடைந்துள்ள அதிர்வு இணையம் அண்மைய சில நாட்களாக அண்மையில் பாரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் பரிதி அவர்களின் படுகொலை தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்டுவந்தது அனைவரும் அறிந்த விடயம். இப்பொழுது இந்த படுகொலையுடன் தமிழ் தேசிய விடுதலை அமைப்பாகிய தமிழீழ விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்தி வருவதுடன் முக்கிய தளபதிகளை சிறிலங்கா அரசிற்கும் அதன் ஒட்டுக்குழுவினருக்கும் காட்டிக்கொடுக்கும் வேலையில் வெளிப்படையாக இறங்கியுள்ளது. ஏற்கனவே சில தளபதிகளின் படங்களையும் பெயர்களை காட்டிக்கொடுத்தமையால் சிறிலங்கா அரசு அந்த தளபதிகளை சர்வதேச காவல்துறையின் தேடப்படுவோர் பட்டியலில் இணைத்துள்ளது.

அதிர்வு இணையத்தை நடத்துபவர் அண்மையில் இந்தியா சென்று வந்ததுடன் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இந்திய அரசின் ஒட்டுக்குழுவான ஈஎன்டிஎல்எப் இனால் நடாத்தப்படும் வானொலியின் அரசியல் ஆய்வாளர் ஆகவும் செயல்படுகின்றார். இந்த வானொலியில் அரசியல் ஆய்வு என கூறிக்கொண்டு தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களையும் போராளிகளையும் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த வானொலி எமது தேசிய தலைவரையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் பற்றி பொய் பரச்சாரங்களை பரப்பியதுடன் எமது விடுதலை அமைப்பிற்கு எதிராக ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம் நடத்தியமையை அதிர்வு இணையம் மறைக்க முயர்சிக்கலாம் ஆனால் தமிழ் மக்கள் மறப்பார்களா?

அதிர்வு இணையம் தனது பிரபல்யத்திற்காக சிறிலங்கா அரசால் தாம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தமக்கு மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்துவருகின்றனர். ஏற்கனவே இப்படி தாம் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்; தமிழ் மக்களுக்கு கருனாநதியின் திமுகவினர் துரோகம் இளைத்துவிட்டாதாகவும் தெரிவித்துவந்த அதிர்வின் போலி முகம் கருணாநிதியின் டெசோ கூட்டத்துடன் கிழிந்தது.

அதிர்வு இணையம் தனது இந்திய பயணத்தில் கருணாநிதியின் அறிவுறுத்தலுடன் தமிழகத்தில் ஈஎன்டிஎல்எப் அமைப்பினருடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தந்திற்கு அமையவே ஈஎன்டிஎல்எப் வானொலியுடன் இணைந்துள்ளதாக ஈஎன்டிஎல்எப் அமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினருக்கு புலம் பெயர் தமிழ் மக்களிடையே இருக்கும் ஆதரவு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் நிர்வாக கட்டமைபப்புக்களில் ஒன்றாகிய அனைத்துலக தொடர்பகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக செயற்படும் குழுவினரின் ஆதரவும் அதிர்வு இணையத்திற்கு இருப்பதாக தெரிகின்றது.